

கூடங்குளம் முதலாவது அணு உலையில் வரும் டிசம்பர் 2-வது வாரத்தில் மின் உற்பத்தி தொடங்க வாய்ப்பு இருப்பதாக நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் நேற்று தெரிவித்தார்.
கூடங்குளம் முதலாவது அணு உலையில் பராமரிப்பு பணிகளுக் காக கடந்த ஜூன் 24-ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த அணு உலையில் 687 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அணுஉலையின் டர்பைன் ஜென ரேட்டர் ஒட்டுமொத்தமாக 9,267 மணிநேரம் செயல்பட்டுள்ளது. வருடாந்திரப் பராமரிப்பு பணி களுக்காகவும், எரிபொருள் நிரப்பு வதற்காகவும் 60 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அணுஉலை நிர்வாகம் கடந்த ஜூனில் அறிவித்தது.
அதன்படி 60 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதத் தில் மின் உற்பத்தி தொடங்கி யிருக்க வேண்டும். ஆனால், பராமரிப்பு பணிகள் மற்றும் ஆய்வு கள் தொடர்ந்து மேற்கொள்ளப் படுவதால் மின் உற்பத்தி தொடங் குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக அணுஉலை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, அணுமின் நிலைய வளாகத்தில் நடைபெறும் விவகாரங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அணுஉலை எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
டிசம்பர் 2-வது வாரம்
இந்நிலையில் முதலாவது அணுஉலையில் வரும் டிசம்பரில் மின்உற்பத்தி தொடங்கப்படும் என்றும், 2-வது அணு உலையில் 2016-ம் ஆண்டு இறுதியில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியானது.
இது குறித்து அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தரிடம் நேற்று கேட்டபோது, “முதலாவது அணுஉலையில் டிசம்பர் 2-வது வாரத்தில் மின் உற்பத்தியை தொடங்குவதற்கு ஏதுவாக பணி களை மேற்கொண்டிருக்கிறோம். மின் உற்பத்தி தொடங்கும் தேதியை அறுதியிட்டுத் தெரிவிக்க முடியாது.
2-வது அணுஉலையில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி, வெப்ப நீர் சோதனை ஓட்டம் முடிவ டைந்து ஆய்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அணுசக்தி ஒழுங் கமைப்பு வாரியத்தின் பல்வேறு கட்ட ஒப்புதலுக்குப்பிறகு செறிவூட் டப்பட்ட யுரேனியம் எரிகோல் கள் பொருத்தும் பணி மேற் கொள்ளப்படும். அதன்பின்னர் மின் உற்பத்தி தொடங்கும்” என்றார் அவர்.