

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை யொட்டி, திருவாரூர் மாவட்ட அதி முக சார்பில், 140 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருவாரூர் வன்மீக புரம் அம்மா அரங்கில் நேற்று நடைபெற்ற திருமண விழா வுக்கு, அதிமுக துணை ஒருங் கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி தலைமை வகித்தார்.
அண்மையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, குணமடைந்த உணவுத் துறை அமைச்சர் ஆர்.காம ராஜ் விழாவில் பங்கேற்காததால், அவர் சார்பில் அமைச்சரின் மகன் டாக்டர் இனியன் விழாவில் பங்கேற்று, அனைவரையும் வரவேற்றார்.
உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர், திரு மணங்களை நடத்தி வைத்தனர். நிகழ்ச்சிக்கு, முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் கோபால் முன்னிலை வகித்தார். இறுதியில், திருவாரூர் நகரச் செயலாளர் ஆர்.டி.மூர்த்தி நன்றி கூறினார்.
புதிதாக திருமணம் செய்து கொண்ட மணமக்களுக்கு அதிமுக சார்பில் தங்கத் தாலி, பட்டுப்புடவை, வேட்டி மற்றும் குத்துவிளக்கு, கட்டில், மெத்தை, பீரோ, மின்விசிறி, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட 78 வகையான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. மணமக்களுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகி யோர் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தனர்.