

இலங்கை கடற்படையினரின் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு, தாக்குதல் சம்பவங்கள் நீடிப் பது குறித்து ஆலோசனை செய்வதற்காக ராமேசுவரம் மீனவர் பிரநிதிகளின் அவசரக் கூட்டம் ராமேசுவரத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மீனவர் பிரதிநிதி போஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 53 படகுகள் பல மாதங்களாக அந்நாட்டின் கடற்படை முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன்பிடி படகுகளையும், இலங்கை சிறை களில் உள்ள 29 தமிழக மீனவர் களையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிசம்பர் 3-ம் தேதிக்குள் மீனவர்களும், விசைப் படகுகளும் விடுவிக்கப்படவில்லை என்றால் டிச.4 முதல் மீனவர்கள் காலவரை யற்ற வேலைநிறுத்தம் தொடங் கும். அதைத் தொடர்ந்து மக்க ளவை முற்றுகைப் போராட்டமும் நடைபெறும்.மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடை யிலான 4-ம் கட்ட பேச்சுவார்த் தையை விரைவில் நடத்த வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன என்றார்.