அமமுக நிர்வாகி கொலை வழக்கில் வேலூர் நீதிமன்றத்தில் 3 பேர் சரண்

வேலூர் நீதிமன்றத்தில் நேற்று 3 பேர் சரணடைந்தனர்.
வேலூர் நீதிமன்றத்தில் நேற்று 3 பேர் சரணடைந்தனர்.
Updated on
1 min read

திருப்பத்தூர் கவுதம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அமமுக மாவட்ட மாணவரணி செயலாளர் வானவராயன் (30). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், திமுக பிரமுகர் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், பெங்களூருவில் பதுங்கி இருந்த கூலிப்படை கும்பலைச் சேர்ந்த தாமஸ் (28), சூர்யா (28), அமரீஷ் (22) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், வானவராயன் கொலை வழக்கு தொடர்பாக வேலூர் ஜெ.எம்-1 மாஜிஸ்திரேட் முகிலாம்பிகை முன்னிலையில், திருப்பத்தூர் கவுதம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபு என்ற பிரபாகரன் (39), இவரது சகோதரர் அரவிந்தன் (26) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரபீக் என்ற நந்தகுமார் (25) ஆகியோர் நேற்று சரணடைந்தனர்.

இவர்களை, வேலூர் மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in