ஒரே நாடு, ஒரே வரி என கூறுபவர்கள் பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வராதது ஏன்? - மத்திய அரசுக்கு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

ஒரே நாடு, ஒரே வரி என கூறுபவர்கள் பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வராதது ஏன்? - மத்திய அரசுக்கு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி
Updated on
1 min read

ஒரே நாடு, ஒரே வரி என்றவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் ஏன்? கொண்டு வரவில்லை என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பினார்.

பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, திமுக சார்பில் தி.மலை அண்ணா சிலைமுன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “பிரதமர் மோடி, சிறந்த பேச்சாளர். ஆனால், சிறந்த நிர்வாகி இல்லை. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உச்சத்தில் உள்ளது. 110 டாலர் என்ற மதிப்பில் கச்சா எண்ணெய் விலை இருந்த போது 50 ரூபாய்க்கு குறைவாக இருந்த விலை, 40 டாலர் விலை என இருக்கும்போது ரூ.92.59-க்கு விற்பனை செய்கிறார்கள்.

400 ரூபாய்க்கு விற்பனையான காஸ் சிலிண்டர் 800 ரூபாய்க்குவிற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாடு,ஒரே வரி என பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டரை ஏன்? கொண்டு வரவில்லை. ஜிஎஸ்டி வரிக்குள் வந்துவிட்டால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.58-க்கு விற்பனையாகும். விலை உயர்வால் ஏழைகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இந்த ஆட்சியில் உள்ள அமைச்சர் கள் எல்லாம், மோடியை டாடி என்கிறார்கள். அதனால், டாடியை எதிர்த்துபேசமாட்டார்கள். அனைத்து விலைகளும் குறைய, ஆட்சி மாற்றம் தேவை. கோட்டையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக அமரும்போதுதான் தமிழகத்துக்கும் தமிழர்களும் விடியல் பிறக்கும்” என்றார். இதில், எம்எல்ஏக்கள் பிச்சாண்டி, சேகரன், அம்பேத்குமார், கிரி, தலைமை செயற்குழு உறுப்பி னர் தரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in