

இந்து சமய அறநிலையத் துறையில் 6 இணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு:
இந்து சமய அறநிலையத் துறையின் திருநெல்வேலி மண்டல இணை ஆணையர் அ.தி.பரஞ்சோதி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையராகவும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் நா.பழனிக்குமார் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் இணை ஆணையராகவும், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையராகவும், சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் கடலூர் மண்டல இணை ஆணையராகவும், கன்னியாகுமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையர் எம்.அன்புமணி தூத்துக்குடி மண்டல இணை ஆணையராகவும், மயிலாடுதுறை மண்டலஇணை ஆணையர் எஸ்.செல்வராஜ் திருநெல்வேலி மண்டல இணை ஆணையராகவும் பணியிடமாறுதல் செய்து நியமனம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் உடனடியாக அங்கு பணியில் சேருமாறு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.