‘பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வருவது திமுகவின் வழிமுறை’

‘பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வருவது திமுகவின் வழிமுறை’
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று நடந்த பாஜக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, "வரும் 25-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி கோவை வருகிறார். அவரை வரவேற்பதற்காக, திருப்பூர் பகுதியில் ஏராளமானோர் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் இரவு உறங்க போகும் முன்பாக, மறுநாள் எந்த வாக்குறுதியை சொல்லலாம் என யோசித்து வருகிறார். அது சாத்தியப்படுமா? சாத்தியப்படாத என்பது குறித்த கவலைப்படாமல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார். 1967-ல் தொடங்கி திமுகவின் வழிமுறை பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வருவது என்பதாக உள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in