சகாயம் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை வேண்டும்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சகாயம் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை வேண்டும்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Updated on
1 min read

கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையின் அடிப்படையில் வெளிப்படையான விசாரணை மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.

அரியலூரில் நேற்று நடைபெற்ற கட்சியின் மாவட்ட நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்ற அவர், முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மதுரை கிரானைட் முறைகேடு தொடர்பாக சட்ட ஆணையர் சகாயம் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தொடர் நடவடிக்கைகளாக சி.பி.ஐ விசாரணை, சிறப்பு நீதிமன்றம் அமைப்பு ஆகியவை மேற்கொள்ளப்படுவதுடன், தமிழக அரசும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தருவது உள்ளிட்ட நடவடிக்கைகளை வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டு களாக ஆட்சியிலிருந்த திராவிட கட்சிகள் சரிவர ஏரி, குளங்களை தூர் வாராததும் தற்போதைய வெள்ள பாதிப்புக்கு முக்கிய காரணம். தாழ்வான பகுதிகளி லும், நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதி களிலும் பொதுமக்கள் குடியேற அரசு அனுமதிக்க கூடாது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கட்சி பாகுபாடின்றி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தஞ்சை திருவாரூர், நாகை மாவட்டத்தில் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களின் மானாவாரி நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும் நிவாரண நிதியாக விவசாயிகள் கேட்டிருப்பதை உடனடியாக அரசு வழங்க வேண்டும். இதுபோன்ற சமயத்தில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகைகளை பெற்றுத் தருவதுடன், பாதிப்புள்ள விவசாயிகளுக்கு அனைத்து வரிகளையும் அரசு ரத்து செய்யவும் வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in