

மதுரை திருப்பாலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.மூர்த்தி எம்எல்ஏ பேசியதாவது: அதிமுக ஆட்சியில் முதியோர், விதவைகளுக்கான உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரைக்கு மோனோ ரயில், தமிழன்னைக்கு சிலை எனப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவில்லை. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமைச்சர்கள் வெற்று அறிக்கைகளை அறிவித்து வருகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நியாயமான கோரிக்கைகள் நிறை வேற்றப்படும். எத்தனை தடைகள் வந்தாலும் மக்களின் ஆதரவோடு ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி. திருச்சி திமுக மாநாடு குறித்து சைக்கிள் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.