

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவுக்கு பாராட்டு விழா நடந்தது. நாடார் உறவின் முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமை வகித்தார்.
பசும்பொன் அறக் கட்டளை நிறுவனர் எம்.பரமசிவம் முன்னிலை வகித்தார். பொதுநல மருத்துவமனை தலைவர் டி.கே.டி.திலகரத்தினம் வரவேற்றார்.
விழாவில், அமைச்சர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சராக பணியாற்றி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொகுதிக்கு செய்துள்ளேன். கோவில்பட்டி நகருக்கு 2-வது குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளேன். 248 கிராம குடிநீர் திட்டம் ஓரிரு நாளில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
மீண்டும் அதிமுக அரசு அமைந்ததும் பம்பை ஆறு - வைப்பாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இளையரசனேந்தல் குறுவட்டத்தை இணைத்து கோவில்பட்டியை தலைமையிட மாகக் கொண்டு கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளை இணைத்து புதிய மாவட்டம் உருவாக்க திட்டம் உள்ளது என்றார்.