

புதுக்கோட்டையில்காவிரி- குண்டாறு இணைப்பு திட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:
தமிழகத்தில் தொழில் புரட்சி, வேளாண் புரட்சி, கல்விப் புரட்சி என யாராலும் குறைகூற முடியாத அளவுக்கு அதிமுக ஆட்சி செய்து வருகிறது.
அந்த அளவுக்கு 100 ஆண்டு களில் செய்ய வேண்டிய திட்டங் கள், அதிமுக ஆட்சியின் கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப் பட்டுள்ளன.
உழவு செய்யும் நேரத்தில் ஊர் சுற்றிவிட்டு அறுவடைக்கு அரிவாளோடு சென்ற கதையாக, ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு எதையும் செய்யாமல் தேர்தல் நேரத்தில் அதிமுக அரசைப் பற்றி மு.க.ஸ்டாலின் வசைபாடி வருகிறார்.
எந்தக் காலத்திலும் நம்மிடம் இருந்து ஆட்சியை ஸ்டாலினால் தட்டிப்பறிக்க முடியாது.தொடர்ந்து 3-வது முறையாக அதிமுகவே தமிழகத்தில் ஆளும் என்றார்.