Published : 21 Feb 2021 03:18 AM
Last Updated : 21 Feb 2021 03:18 AM

நீதிபதிகள், வழக்கறிஞர்கள் இடையே சென்னையில் கிரிக்கெட் போட்டி

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் - வழக்கறிஞர்களுக்கு இடையே நல்லுறவை பேணும் வகையில் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி.கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். கோப்பையுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள்.படம்: பு.க.பிரவீன்

சென்னை

உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையே நல்லுறவை பேணும் வகையில் கிரிக்கெட் போட்டி நேற்று நடை பெற்றது.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தலைமையிலான வழக்கறிஞர்கள் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் வழக்கறிஞர்கள் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சி.டி.கோபிநாத்பரிசுக் கோப்பையை வழங்கினார்.

இப் போட்டி குறித்து தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கூறும்போது, ‘‘இதுபோன்ற போட்டிகள்,நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்துவதோடு, புது உற்சாகத்தையும் தரும் வகையில் அமைந்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x