Published : 21 Feb 2021 03:18 AM
Last Updated : 21 Feb 2021 03:18 AM

12-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

சென்னை

பெட்ரோல், டீசல் விலை கடந்த 12 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.92.25-க்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.85.63-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையே, நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து ரூ.92.59-க்கும், டீசல்லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்துரூ.85.98-க்கும் விற்பனையானது.

மும்பையில் பெட்ரோல் லிட்டர் ரூ.97-க்கும் டெல்லியில் ரூ.90.58-க்கும், ஹைதராபாத்தில் ரூ.94.18-க்கும், பெங்களூரூவில் ரூ.93.61-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம், கங்காநகரில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.16-க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x