Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM

டாக்டர் ரங்கன்ஜி எழுதியுள்ள ‘வேதம் என் வேட்கை’ நூல் இன்று வெளியீடு: சென்னை நங்கநல்லூரில் நடக்கிறது

ஆன்மிக சொற்பொழிவாளரும், எழுத்தாளருமான டாக்டர் ரங்கன்ஜி எழுதியுள்ள ‘வேதம் என் வேட்கை’ என்றநூல் சென்னை நங்கநல்லூரில் இன்று மாலை வெளியிடப்படுகிறது.

ஆன்மிக சொற்பொழிவாளரான டாக்டர் ஆர்.ரங்கன்ஜி, தனது ‘வெபோலிம்’ (வெப் ஆஃப் லைஃப் மேக்கர்ஸ்) அறக்கட்டளை மூலம் பெங்களூருவின் ஜிகனி அருகே உள்ள ஸ்ருதிராம் குருகுலத்தை நடத்துகிறார்.

தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் (என்ஐஓஎஸ்) மூலம் யோகா, ராமாயணம், சாஸ்திரங்கள், சம்ஸ்கிருதம் மற்றும் பொதுப் படிப்புகளுடன் முழுமையான கல்வியை வழங்கும் சீதாலட்சுமி குருகுலத்தையும் நடத்தி வருகிறார்

ரங்கன்ஜி தனது பல ஆண்டு கால ஆராய்ச்சியை தொடர்ந்து, ரிக் வேதத்தின் சம்ஸ்கிருத விளக்க உரையாக ‘த்வனி தீபிகா’ என்ற நூலை எழுதியுள்ளார்.

கிருஷ்ணப் பிரேமி சுவாமிகள்

இந்த நூலை கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூரில் கிருஷ்ணப் பிரேமி சுவாமிகள் கடந்த ஜனவரி 27-ம் தேதி வெளியிட்டார்.

அதன் சாரமாக, ஆங்கிலத்தில் ரங்கன்ஜி எழுதியுள்ள ‘வேதம் என் வேட்கை’ (‘The Veda, My Passion’) என்ற நூல், சென்னை நங்கநல்லூர் இந்து காலனியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் இன்று (பிப்ரவரி 21) மாலை 6 மணி அளவில் வெளியிடப்படுகிறது.

இதையொட்டி, ராம கானாம்ருத பஜனை, நூல் குறித்த சரஸ்வதி ஆராய்ச்சி மையத்தின் இணை இயக்குநர் ராம்மோகன்ஜியின் உரை,‘வேத நெறி தழைத்தோங்க’என்ற தலைப்பில் ரங்கன்ஜியின் உபன்யாசம், டோலோத்சவம் நடைபெறுகின்றன.

குருகுலம், வெபோலிம் பற்றிய கூடுதல் விவரங்களை www.webolim.org என்ற இணையதளத்தில், அறிந்து கொள்ளலாம்.

புத்தகங்கள் பற்றி மேலும் விவரங்கள் அறிய webolimclasses@gmail.com என்ற மின்னஞ்சல் மற்றும் 88258 39404 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x