

புதுச்சேரி குருவிநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். முன்னாள் எம்எல்ஏ ராமநாத னின் மகனான இவர் ஏற்கெனவே இருமுறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். 2001-ம் ஆண்டில் குடிசை மாற்று வாரிய தலைவர், 2006-2011 காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக செயல்பட்டார்.
காங்கிரஸில் இருந்து விலகிய ராதாகிருஷ்ணன், ரங்கசாமி தலைமையி லான என்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2014-ம் ஆண்டு மக்க ளவைத்தேர்தலில் போட் டியிட்டு உறுப்பினரானார். பதவிக்காலம் முடிவ டைந்த நிலையில் அரசியலில் நாட்டம் காட்டாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், ‘‘இன்று முதல் நான் அரசியலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்திருக்கிறேன். இதுநாள் வரையிலும் என்னுடைய அரசியல் பணிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. எனது இந்த முடிவுக்கு என்னுடைய தொகுதி மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் மதிப்பளிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.