விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் ‘ஸ்வைபிங்’ இயந்திரத்தை தவிர்க்கும் விற்பனையாளர்கள்

விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் ‘ஸ்வைபிங்’ இயந்திரத்தை தவிர்க்கும் விற்பனையாளர்கள்
Updated on
1 min read

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங் களில் 223 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 600-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு விற்பனையாகும் பணத்தை கடையில் வைத்து சென்றால், சுவற்றில் துளைபோட்டு பணத்தை கொள்ளை அடிப்பதும், ஊழியர்கள் இரவு வீட்டிற்கு பணத்தை கொண்டு செல்லும் போது வழிப்பறியும் நடந்து வருகின்றன. இதைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

இதற்கிடையே, தமிழகம் முழு வதும் அனைத்து டாஸ்மாக் கடைக ளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத் தப்பட்டுள்ளன.

குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 223 டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை நடைபெறும் இடத்தை மாவட்ட மேலாளர்கள் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதே போல் விற்பனையாகும் பணத்தை பாதுகாப்பாக வைப்பதற்காக 100 கிலோ எடையுள்ள லாக்கர் கிராமப்புறக் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், தனியார் வங்கி மூலம் ஓவ்வொரு கடைக்கும் ‘ஸ்வைபிங்' இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் டெபிட், கிரெடிட் கார்டு மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த முடியும். இதன் மூலம் பணத்திருட்டை தடுக்கலாம்.

அதையும் தாண்டி ‘ஸ்வைபிங்' இயந்திரம் மூலம் பணம் செலுத்தும் போது, மது வகைகளுக்கு கூடுதல் விலையை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க முடியாது.

எனவே ‘ஸ்வைபிங்' இயந்திரத்தை கடை விற்பனையாளர்கள், வாடிக்கை யாளர்கள் கண்களில் படாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

விவரம் அறிந்த வாடிக்கையாளர்கள் இதுபற்றி கேட்டால், ‘இணைய இணைப்பு கிடைக்கவில்லை’ என்று கூறி, வழக்கம் போல மது வகைகளோடு கூடுதலாக ரூ. 5 முதல் ரூ. 20 வரை வசூலித்து வருகின்றனர் என்று மது அருந்துவோர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து டாஸ்மாக் மண்டல மேலாளர் முருகனிடம் கேட்ட போது, “வாடிக்கையாளர்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதாக விற்பனையாளர்களிடம் கூறினால் அப்படியே பெற்றுக் கொள்ளப்படும்.

மேலும் கடைகளில் இவ்வசதி உள்ளது என்று அறிவிப்பு பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in