

தட்டச்சர் பணிக்கான முதல் கட்ட கவுன்சலிங் ஜூன் 19 முதல் ஜூலை 5-ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
குரூப்-4-ல் அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 25.8.2013 அன்று நடந்தது. தட்டச்சர் பதவிக்கான முதல்கட்ட கவுன்சலிங் ஜூன் 19 முதல் ஜூலை 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுபற்றிய விவரம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
கவுன்சலிங்கிற்கு வரும்போது, அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் பெறப்பட்ட சான்றிதழ் நகல்களை தவறாமல் கொண்டுவர வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப் பித்தபோது, 10-ம் வகுப்பு கல்வித்தகுதியை தமிழ் வழியில் படித்தது பற்றி குறிப்பிட்டவர்கள் மட்டும் அதற்கான சான்றிதழை தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து வாங்கிவர வேண்டும்.
காலியிடங்கள் பட்டியல்
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் விண்ணப்ப தாரர்கள் அதில் தகுதிபெறும் பட்சத்தில் மறுநாள் நடக்கும் கவுன்சலிங்கிற்கு அனுமதிக் கப்படுவார்கள். ஒவ்வொரு நாளும் கவுன்சலிங் முடிவடைந்த பிறகு காலியிடங்கள் குறித்த தகவலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் காலி யிடங்களை பொருத்துதான் சான்றிதழ் சரிபார்ப்புக்கும், கவுன்சலிங்கிற்கும் அனுமதிக் கப்படுவர். எனவே, அழைக்கப் படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் கிடையாது. கவுன்சலிங்கிற்கு வரத்தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.