

சேலம் மாநகர காவல் துறையின் புதிய ஆணையராக சந்தோஷ்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை நிர்வாக பிரிவு ஐஜி-யாக இருந்த சந்தோஷ்குமார், சேலம் மாநகர காவல் துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். சேலம் மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்றி வந்த செந்தில்குமார், சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சேலம் மாநகர காவல் துறை ஆணையராக சந்தோஷ்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக முன்னாள் மாநகர காவல் துறை ஆணையர் செந்தில்குமார் வாக்கி டாக்கி மூலம் தனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து காவலர்களுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
புதியதாக பொறுப்பேற் றக் கொண்ட மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமாரை துணை காவல் ஆணையர்கள், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். தேர்தல் நெருங்கி விட்டதால், அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார் காவல் துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.