அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிய மருத்துவர் பணிக்கு நேர்காணல்

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று அம்மா மினி கிளினிக்கு களில் தற்காலிகமாக பணிபுரிய மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர் களுக்கான நேர்காணல் நடந்தது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று அம்மா மினி கிளினிக்கு களில் தற்காலிகமாக பணிபுரிய மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர் களுக்கான நேர்காணல் நடந்தது.
Updated on
1 min read

சுகாதாரத் துறையின் சார்பில், ஒரு புதிய முயற்சியாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களைக் கண்டறிந்து சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்த பகுதிகளிலேயே சிகிச்சை பெறக் கூடிய அளவுக்கு தமிழகம் முழுவதும், 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளருடன், 2000 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 50 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட உள்ளன. மாவட்டத்தில் இதுவரை 36 அம்மா மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றும் மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படை யில் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இதற்கான நேர்காணல் நேற்று கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் கோவிந்தன் கண்காணிப்பில் 3 தேர்வுக் குழுவினர் இந்த நேர்காணலை நடத்தினர். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு நடந்த இந்த நேர் காணலுக்கு 167 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு நேற்று நடந்த நேர்முகத் தேர்வில், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in