

ராமநாதபுரம் எல்ஐசி அலுவலகம் சார்பில் எல்ஐசி காப்பீடுத் திட்ட விழிப்புணர்வுப் பேரணி அரண் மனை முன் நடைபெற்றது.
பேரணியில் ஏராளமான காப்பீடு முகவர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்றனர். அவர்கள் எல்ஐசியின் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த பதாகைகளை ஏந்திச்சென்றனர்.
இப்பேரணி கேணிக்கரை சாலை, புதிய பஸ் நிலையம், மதுரை சாலை வழியாக எல்ஐசி கிளை அலுவலகத்தில் நிறை வடைந்தது. விழிப்புணர்வுப் பேரணியைத் தொடங்கி வைத்த எல்ஐசி மதுரைக் கோட்ட முதுநிலை மேலாளர் எல்.செந்தூர்நாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாடு முழுவதும் எல்ஐசியில் 40 கோடி பாலிசிதாரர்கள் உள்ளனர்.எல்ஐசி மூலம் 2020-21-ம் ஆண்டில் மொத்தம் ரூ.45,000 கோடி பொது வணிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரைக் கோட்டத்தில் மட்டும் ரூ.380 கோடி வசூலாகி உள்ளது. அதன்படி 1,25,000 பாலிசிதாரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பான சேவை மூலம் காப்பீடு நிறுவனம் நாட்டிலேயே முன்னணி நிறுவனமாகச் செயல் படுகிறது என்றார். நிகழ்ச்சியில் கோட்ட வர்த்தகப் பிரிவு மேலா ளர் வி.எஸ்.ஆனந்தகுமார், ராம நாதபுரம் முதுநிலைக் கிளை மேலாளர் ஜி.லெட்சுமணன், அகில இந்திய காப்பீடு ஊழியர் சங்க கிளைச் செயலாளர் டி.முத்துப் பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.