

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது: வறட்சி, வெள்ளம் பாதிப்பு போன்றவற்றால் 2016-ம் ஆண்டில் இருந்து விவசாயிகள் பயிர்க் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. அரசின் அறி விப்பால் 2016-ம் ஆண்டில் இருந்து பெற்ற அனைத்து பயிர்க் கடன்களும் தள்ளுபடியாகும் என நினைத்தோம். ஆனால் கடந்த ஆண்டு வாங்கிய குறுகிய கால பயிர்க் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் எனவும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் வாங்கிய பயிர்க் கடன்களை மத்தியகால கடன்களாக மாற்றிவிட்டதால் அவற்றை தள்ளுபடி செய்ய முடியாது எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பயிர்க்கடன் பெயரில் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வதாகக் கூறிவிட்டு, தற்போது தள்ளுபடி செய்ய முடியாது என கூறுகின்றனர். இத னால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். அனைத்து பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
நெல் கொள்முதல் நிலை யங்களை திறக்காததால் விவ சாயிகள் மூட்டைகளுடன் காத்தி ருக்கும் நிலை உள்ளது. மேலும் மூட்டைக்கு ரூ.40 வாங்குகின்றனர். 40 கிலோ மூட்டைக்கு 2 கிலோ கூடுதலாகப் பெறுகின்றனர் என்று கூறினர்.
ஆட்சியர் பேசியதாவது: அரசின் விதிமுறைகளின்படி தான் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறினார்.