

திருப்பத்தூர் அருகே மயானப் பகுதிக்கு சாலை வசதி கேட்டு பொதுமக்கள் உயிரிழந்தவர் உடலு டன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் பொம் மிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அத்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராமர் (67). இவர், உடல் நலக்குறை வால் நேற்று முன்தினம் உயிரிழந் தார். இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர் கள் மற்றும் பொதுமக்கள் நேற்று அருகேயுள்ள மயானப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
மயானப்பகுதிக்கு செல்லும் பாதையை, தனிநபர் ஒருவர் முள்வேலி போட்டு அடைத்துள்ள தாக கூறப்படுகிறது. இதனால், பாதை வசதி இல்லாததால் உயிரி ழந்த ராமரின் உடலை நடுரோட்டில் வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘பழைய அத்திக் குப்பம் கிராமத்தையொட்டி புது வட்டம், அம்மன் வட்டம், மேட்டுக் கொள்ளை, மன்னார்வட்டம் உட்பட10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. எங்கள் பகுதியைச் சேர்ந் தவர்கள் யாராவது உயிரிழந்தால் பாம்பாற்றின் கரையோரம் உள்ள மயானப்பகுதியில் அடக்கம் செய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாம்பாற்றின் குறுக்கே தமிழக அரசு தடுப்பணை ஒன்றை கட்டியது. தடுப்பணையில் தண்ணீர் இல்லாததால் பாம்பாற்றை கடந்து மயானப்பகுதிக்கு சென்று வந்தோம்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தற்போது தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனால், தடுப்பணை வழியாக மயானப் பகுதிக்கு செல்ல முடியவில்லை. எனவே, தடுப்பணையையொட்டி யுள்ள சிறு பாதை வழியாக மயானப் பகுதிக்கு சென்று வந்தோம். ஆனால், அந்த பாதையை தனிநபர் ஒருவர் முள்வேலி அமைத்து அடைத்து விட்டதால், 10 கிராமங் களைச் சேர்ந்த பொதுமக்களால் மயானப் பகுதிக்கு செல்ல முடிய வில்லை. இது குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மயானப்பகுதிக்கு செல்ல வழி ஏற்படுத்தித் தரக்கோரி மறிய லில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர்.
இந்த தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி தலைமையிலான காவல் துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த தனிநபரிடம் கலந்து பேசி, வருவாய்த் துறை யினர் மூலம் விரைவில் மயானப் பகுதிக்கு வழி அமைத்து தரப் படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதனையேற்ற பொதுமக்கள் பாம்பாறு தடுப்பணை தண்ணீரில் இறங்கி,கழுத்தளவு தண்ணீரில் உடலை தோளில் சுமந்தவாறு மயானப் பகுதிக்கு உடலை கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.