Published : 20 Feb 2021 03:18 AM
Last Updated : 20 Feb 2021 03:18 AM

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வேலூர்-சித்தூர் மாவட்டங்கள் இடையிலான உளவு தகவல்கள் பரிமாற்றம்: மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழக-ஆந்திர மாநிலங்களுக்கு இடையே சட்டம்-ஒழுங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணன், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பணப்பரிமாற்றம், குற்ற வாளிகள் பதுங்கல் தொடர்பாக வேலூர், சித்தூர் மாவட்டங்கள் இடையிலான உளவு தகவல்களை பரிமாறிக்கொள்ள இரு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடை பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வரும்நிலையில் அண்டை மாநிலங்களு டன் இணைந்து சட்டம்- ஒழுங்குமற்றும் தேர்தல் நேரத்தில் எடுக்கப் பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தை யொட்டி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் உள்ளது. சித்தூர் மாவட் டத்துடன் சுமார் 65 கி.மீ தொலைவு எல்லையை வேலூர் மாவட்டம் பகிர்ந்துள்ளது. எனவே, 2 மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான தேர்தல் முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), ஹரிநாராயணன் (சித்தூர்) மாவட்ட காவல் கண் காணிப்பாளர்கள் செல்வகுமார் (வேலூர்), செந்தில்குமார் (சித்தூர்),சித்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் முரளி, வருவாய் கோட்டாட்சி யர்கள் ஷேக் மன்சூர் (குடியாத்தம்), காமராஜ் (வேலூர் பொறுப்பு), ரேணுகா (சித்தூர்), சித்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நிஷாந்த், துணை காவல் கண்காணிப்பாளர் கள் ரவிச்சந்திரன் (வேலூர் மாவட்டதேர்தல்), ரவிச்சந்திரன் (காட்பாடி), ஸ்ரீதரன் (குடியாத்தம்), சுதாகர் ரெட்டி (சித்தூர்) உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தமிழகத்தில் நடை பெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் சட்டம் -ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் ரவுடிகள் சித்தூர் மாவட்டத்தில் தஞ்சமடைவார்கள் என்பதால் அவர்களை கைது செய்யவும், தமிழக எல்லைக்குள் சாராயம் எடுத்து வருவதை தவிர்க்கவும், இரு மாநிலங்களில் குற்றவாளிகள் மீதான நிலுவையில் உள்ள நீதிமன்ற கைது ஆணைகளை நடைமுறைப்படுத்தவும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரித்து பணப் பரிமாற்றத்தை தடுக்க அதிகளவில் சோதனை நடத்தவும் ஆலோசனை நடந்தது.

இந்தக்கூட்டம் தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட் டத்தின் எல்லை மட்டும் தமிழகத்துடன் சுமார் 120 கி.மீ தொலைவுக்கு உள்ளது. இதில், 65 கி.மீ தொலைவு வேலூர் மாவட்டத்துடன் தொடர்புடையது.

தற்போது 6 சோதனைச் சாவடிகள் உள்ளன. இதை 9-ஆக உயர்த்தப்பட உள்ளது. மேலும், சித்தூர் மாவட்டத்தில் இருந்து 15 வழித்தடங்கள் வேலூர் மாவட்டத்துடன் தொடர்பில் உள் ளது. அங்கெல்லாம் ரோந்து வாக னங்கள் மூலம் கண்காணிக்கப்பட வுள்ளன.

வருவாய்த் துறை, காவல் துறை, கலால் துறையுடன் வனத்துறை யும் இணைந்து சோதனைகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, இரு மாவட்ட அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ்-அப் குழு ஒன்று ஏற்படுத்தி தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடிகள் ஜானி மற்றும் வசூர் ராஜா ஆகியோரின் நடவடிக்கைகள் குறித்த தகவல் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

தேர்தலின்போது ஆந்திர மாநில எல்லைகள் வழியாக பணம் கடத்தலை தடுக்க தீவிரமாக கண் காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. செம்மரம் கடத்தல் விவகாரங்களில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் அவர்கள் மீதான நிலுவையில் உள்ள நீதிமன்ற கைது நடவடிக் கைகள் குறித்தும் விவாதிக்கப்பட் டது. 2 மாவட்ட அதிகாரிகள் இடை யிலான தொடர்பை தேர்தலுக்குப் பிறகும் தொடரவும் முடிவு செய்யப் பட்டது’’ என தெரிவித்தனர்.

உளவு தகவல்கள் பரிமாற்றம்

வேலூர் மாவட்ட ஆட்சியர்சண்முகசுந்தரம் செய்தியாளர்களி டம் கூறும்போது, ‘‘2 மாவட்டங்கள் இடையில் கஞ்சா கடத்தல், சாராயம், மதுபாட்டில் கடத்தல், பணம் பதுக்கலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குற்றவாளி கள் எல்லை தாண்டி வருதை கண்காணிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

2 மாவட்ட அதிகாரிகள் மத்தியில்உளவு தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படும். சோதனைச் சாவடி கள் மற்றும் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு அதிகரிக்கப் படும். வேலூர், சித்தூர் மாவட்ட எல்லையில் உள்ள கவுன்டன்யா வனப்பகுதி வழியாக சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x