கூட்டுறவு சங்கங்களின் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகம் முழுவதுமுள்ள கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (பிப். 19) விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் சார்பில் சிறப்பு அரசு பிளீடர்கள் பால ரமேஷ் எல்.பி.சண்முகசுந்தரம், மனுதாரர்கள் சார்பில் சி.பிரகாசம் உட்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார்.

அதில், "கூட்டுறவு சங்கங்களில் தற்காலிகமாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்த கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடராத தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் இதேபோன்ற தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவை 8 வாரத்தில் அமல்படுத்த வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in