Published : 19 Feb 2021 10:10 AM
Last Updated : 19 Feb 2021 10:10 AM

பிப்.25 முதல் காங்கிரஸ் சார்பில் விருப்ப மனு விநியோகம்: கே.எஸ்.அழகிரி 

சென்னை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வரும் 25-ம் தேதி முதல் விருப்ப மனு பெற்று விண்ணப்பிக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ள நிலையில் திமுக, அதிமுக தலைமையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக் களம் காண்கின்றன. இது தவிர மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் உள்ளன. கட்சிகள் விருப்ப மனு விநியோகத்தைத் தொடங்கியுள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் 234 தொகுதிகளுக்கும் விண்ணப்பம் பெறலாம் என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:

“நடைபெறவுள்ள 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன.

விருப்ப மனுக்களை அளிக்க விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் நூறு ரூபாய் கட்டணம் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மார்ச் 5ஆம் தேதிக்குள் பொதுத்தொகுதிகளுக்கு ரூபாய் ஐந்தாயிரமும், தனித்தொகுதிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களும், மகளிருக்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறும் கட்சி நன்கொடையாக வரைவோலை மூலம் (Demand Draft) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்ப மனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முறையாகப் பூர்த்தி செய்தும், இணைக்கப்பட வேண்டிய இதர விவரங்களை விருப்ப மனுவுடன் சேர்த்து இணைத்து நன்கொடைத் தொகையை TAMILNADU CONGRESS COMMITTEE என்ற பெயரில் வரைவோலையாக (Demand Draft) சென்னை, சத்தியமூர்த்தி பவனில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 5ஆம் தேதிக்குள் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

விருப்ப மனு அளிக்கும் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card), ஆதார் அட்டை (Aadhar Card) மற்றும் பான் கார்டு (Pan Card) நகலை கட்டாயம் இணைக்க வேண்டும்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x