

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய தலைவர்கள் பலரும் தமிழகத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர். பிரதமர் மோடி கடந்த 14-ம் தேதிசென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடக்க விழாவில் பங்கேற்றார்.
முன்னதாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த ஜனவரி 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஜனவரி 14, 23, 24, 25-ம் தேதிகளில் தமிழகத்திலும், கடந்த 17-ம் தேதி புதுச்சேரியிலும் பிரச்சாரம் செய்தார்.
கோவையில் வரும் 25-ம் தேதி நடைபெறும் பிரச்சாரகூட்டத்தில் பிரதமர் மோடியும், விழுப்புரத்தில் 28-ம் தேதிநடைபெறும் பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷாவும் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், மார்ச் 1-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் சென்னை வர உள்ளார். அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் பேச இருப்பதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.