

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே முன்விரோதத்தில், திமுக இளைஞரணி அமைப் பாளர் செல்லத்துரை (45) வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
முக்கூடலை அடுத்த அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார். அரியநாயகிபுரம் ஊராட்சி தலைவராக இருந்துள்ளார். இவருக்கும், இவரது உறவினர்களுக்கும் இடையே இடப் பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.
அப்பகுதியிலுள்ள தனது கோழிப் பண் ணைக்கு செல்லத்துரை நடந்து சென்றபோது, அடையாளம் தெரி யாத கும்பல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி யோடிவிட்டது. பலத்த காயமடைந்த செல்லத் துரை உயிரிழந்தார். இச்சம் பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட எஸ்பி மணிவண்ணன் உள்ளிட்ட போலீஸார் விசாரணை நடத்தினர்.