

அதிமுக ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடர அரசுக்கு, மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் வரு வாய்த்துறை சார்பில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் 1,849 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டா மற்றும் 22 அம்மா கிளினிக் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் வரவேற்றார்.
இதில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந் தினராக பங்கேற்று பேசும்போது, ‘‘தமிழகத்தில் நீர் பிடிப்புப் பகுதி களை தவிர அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வருகிறது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 1,849 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங் கப்படவுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் சில பிரச்சினைகளால் வழங்கப்படாமல் இருந்தது. தற் போது, அந்தப் பிரச்சினை சரி செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் அம்மா மினி கிளினிக் தொடங் கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 106 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு வரு கின்றன. அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங் கப்பட்டு வருகிறது. இவை தொடர மக்கள் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்றார்.
விழாவில் ஆவின் தலைவர் வேலழகன், வேலூர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் குழு தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு உட்பட பலர் பங்கேற்றனர்.