

டெல்லியில் நடக்கும் இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட் காட்சியில் தமிழ்நாடு நாள் விழா நேற்று தொடங்கியது.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், 35 வது இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இப்பொருட்காட்சியில், தமிழக அரசு சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. வழக்கமாக பொருட்காட்சி தொடங்கியதற்கு மறுதினம், தமிழ்நாடு விழா தொடங்கும். அந்த வகையில், நேற்று தமிழ்நாடு நாள் விழாவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன் நேற்று தொடங்கி வைத்தார்.
விழாவில், தமிழகத்தின் பாரம் பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி, கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. விழாவில், தமிழக செய்தித் துறை செயலர் மூ.ராசாராம், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை ஆணையர் ஜஸ்பீர்சிங் பஜாஜ், செய்தித்துறை கூடுதல் இயக்குநர் தாணப்பா ஆகியோர் பங்கேற்றனர்.