அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நிதி வழங்கிய மஸ்தான் எம்எல்ஏ

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலிவரதனிடம் நிதி அளிக்கும் செஞ்சி எம்எல்ஏ மஸ்தான்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலிவரதனிடம் நிதி அளிக்கும் செஞ்சி எம்எல்ஏ மஸ்தான்.
Updated on
1 min read

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற் காக கடந்த 15-ம் தேதி (திங்கள் கிழமை) விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் செஞ்சி எம்எல்ஏ செஞ்சி மஸ்தானை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். ராமர் கோயில் கட்டுவதற்கு எம்எல்ஏ மஸ்தான் வாழ்த்து தெரிவித்ததோடு ரூ. 11,000 நிதியும் வழங்கியுள்ளார்.

விழுப் புரத்தில் அரசு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற மஸ்தானிடம் இதுகுறித்து கேட்டபோது, "இதுவரை 304 கோயில் கும்பாபிஷேகங்களில் கலந்து கொண்டுள்ளேன். நான் சாதி, மதங்க ளுக்கு அப்பாற்பட்டவன். இதை உணர்ந்த பாஜகவினர் என்னிடம் நிதி கேட்டனர். நானும் மனமுவந்து என்னாலான நிதியை கொடுத்துள்ளேன்"என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in