

திருச்சி திருவானைக்கோவில் எல்லைப்பிடாரி அம்மன் கோயில் திருவிழாவை அனைத்து சமூகத் தினரும் ஒருங்கிணைத்து நடத்தக்கோரி பத்மநாபன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்த ரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், கோயில் வழிபாட்டுக்குரிய இடமாகும். மக்கள் நம்பிக்கை அடிப்படையில் கோயிலுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும் போது எந்த வித்தியாசமும் பார்க்கக் கூடாது. எல்லைப்பிடாரி கோயில் திருவிழாவில் மூன்று சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இடையே பிரச்சினை உள்ளது.
கடவுள் எந்த தனிப்பட்ட சமூகத் தையும் அங்கீகரிக்கவில்லை. பிரார்த்தனை செய்ய வரும் மனிதர்களை மட்டுமே அங்கீகரிக் கிறார். இறைவன் வேறுபாடுகளை பார்ப்பதில்லை. வேறுபாடுகளை அனுமதிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
கோயில் இனப்பாகுபாடு பார்க்கும் பிரிவினைக்கான இடம் அல்ல என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவான நம்பிக்கை கொண்ட அனைவரும் கோயிலுக்கு வந்து வழிபடுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். எனவே இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் இணை ஆணையர் முடிவெடுக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள் ளனர்.