

தமிழகத்தில் மழையால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு டிசம்பருக் குள் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
கரூரில் நேற்று அவர் செய்தி யாளர்களிடம் பேசியதாவது:
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை. சென்னை மாநக ராட்சியில் 200 கோட்டங்களில் அம்மா உணவகம் தொடங்கியது போல தற்போது அம்மா படகு சேவை தொடங்கலாம்.
நிவாரணப் பணிகளுக்காக அரசு ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி போதுமானதல்ல. மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெற்று உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண் டும். காலம் தாழ்த்தி வழங்கி னால் அது தேர்தல் கையூட்டாக ஆகிவிடும். எனவே, இப்பணி களை டிசம்பருக்குள் முடிக்க வேண்டும்.
2004-ம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு 2005-ல் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏற் படுத்தப்பட்டது. அப்போது அனைத்து மாநிலங்களிலும் மாநில அளவில் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்க கேட்டுக்கொள்ளப் பட்டது. ஆனால், தமிழகத்தில் இதுவரை பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட வில்லை. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைத்திருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.
மழையால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் சென்னை மட்டுமல்லா மல் தமிழகம் முழுவதும் பண்ணை பசுமை கடைகளைத் திறந்து குறைந்த விலையில் காய்கறிகளை விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பணிகளை மேற் கொண்டுள்ள மத்திய பாதுகாப்பு படைக்கும் வழக்கறிஞர்களுக் கும் எந்த நேரத்திலும் மோதல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் இருந்து மணல் கொள்ளை நடைபெறு கிறது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மின்னாம்பள் ளியில் இடம் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேறு எந்தப் பணியும் நடக்கவில்லை. கரூர் மாவட்டம் தாதம்பாளையம் ஏரியைத் தூர்வாராவிட்டால் விரைவில் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.