தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 3-ல் தொடக்கம்: தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 3-ல் தொடக்கம்: தேர்வு அட்டவணை வெளியீடு
Updated on
1 min read

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 3-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020 - 2021 கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு (பன்னிரண்டாம் வகுப்பு) பொதுத்தேர்வு 03.05.2021 (மே 3) அன்று தொடங்கி 21.05.2021 (மே 21) அன்று முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை தேர்வுகள் நடைபெறும். காலை 10 மணி முதல் 10.10 வரை மாணவர்கள் கேள்வித்தாளை வாசிக்கவும், 10.10 முதல் 10.15 வரை மாணவர்களின் சுயவிவரம் சரிபார்க்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்குக்குப் பின் பள்ளிகள் செயல்படவில்லை. இந்நிலையில், பொங்கல் விடுமுறைக்கு பின் பத்தாம் வகுப்பு பிளஸ் 2 மாணவர்களுக்காக பள்ளிகளைத் திறப்பது குறித்து ஜன.6, 7ல் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

பின்னர், ஜன.19 முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பிறகு 9,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பாடத்திட்டமும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 3-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3ல் மொழிப்பாடம், மே 5ல் ஆங்கில பாடத்திற்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.

தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு அட்டவணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in