

எனது மகன் கனலரசன் கைது செய்யப்பட்டதற்கு பாமகவின் தூண்டுதலே காரணம் என காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா குற்றம்சாட்டினார்.
அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில், மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் நினைவிடத்தில் அவரது மனைவி சொர்ணலதா நேற்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது மகன்கனலரசன் எந்தத் தவறும் செய்யவில்லை. கொடி ஏற்றச் சென்ற எனது மகனை பாமகவின் தூண்டுதலின்பேரில் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். எனது மகன் உடனடியாக விடுவிக்கப்படவில்லை எனில்,மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதுடன், என் மகனின் மாவீரன் மஞ்சள் படை இயக்கத்தின் கொடிகளை கிராமந்தோறும் நானே சென்று ஏற்றுவேன்.
எனது கணவர் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளின்போது அவரது நினைவு இடத்துக்கு வருவதற்கு அனுமதிக்காமல் காவல்துறையினர் 144 தடை உத்தரவு போடுவது ஏன் என்றார்.