தேர்தலுக்கு பின்னர் பொதுக்குழுவை கூட்டி முக்கிய முடிவு: சேலத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தகவல்

சேலத்தில் நடந்த கூட்டத்தில் சேலம் மண்டல மதிமுக சார்பில் நிர்வாகிகள் வழங்கிய தேர்தல் நிதியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெற்றுக்கொண்டார்.
சேலத்தில் நடந்த கூட்டத்தில் சேலம் மண்டல மதிமுக சார்பில் நிர்வாகிகள் வழங்கிய தேர்தல் நிதியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெற்றுக்கொண்டார்.
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் பொதுக்குழுவை கூட்டி முக்கியமுடிவுகள் எடுக்க இருக்கிறோம் என சேலத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்து உள்ளார்.

சேலம் மண்டல மதிமுக சார்பில்தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. அப்போது வைகோ பேசியதாவது:

இந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை திணித்து கொண்டுவரப்படும் புதிய கல்விக் கொள்கையை தடுக்க முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார்?விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் 8 வழிச் சாலை அமைத்தே தீருவேன் என பிடிவாதமாக இருப்பது ஏன்? மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தாரா? அனைத்து துறைகளிலும் இந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பது நடக்காது. பிரதமர் மோடி திருக்குறளையும், தமிழ் பாடல்களையும் பாடினால் தமிழர்கள் ஏமாந்துவிட மாட்டார்கள்.

இந்தி மற்றும் வடவர்களின் ஆதிக்கத்தை திமுக கூட்டணியால்தான் தடுக்க முடியும். அதனால்தான் திமுக கூட்டணியில் தொடர்கிறோம். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என அதிமுகநினைப்பது நடக்காது. தேர்தலுக்குப் பின்னர் பொதுக்குழு கூடிமுக்கிய முடிவுகள் எடுக்க இருக்கிறோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in