Published : 10 Nov 2015 01:35 PM
Last Updated : 10 Nov 2015 01:35 PM

மழையால் சுவர் இடிந்து விழுந்து பலியான 2 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி உதவி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

காஞ்சிபுரத்தில் மழையால் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 2 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகாட்டூர் கங்கையம்மன் கோயில் தெருவில் சரவணா பேக்கரி கட்டிடம் அமைந் துள்ளது. இதன் முதல்தளத்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த ஹாலோ பிளாக் சுவர் கடந்த 8-ம் தேதி பெய்த மழையின் காரணமாக இடிந்து, பின்புறம் அமைந்திருந்த சமையற்கூடம் மீது விழுந்தது.

இதில், சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த சேவகப்பெருமாள், விக்னேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என் விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த வர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்தும் வழங்கப்படும்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x