‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் உறுதியளித்தபடி கள்ளக்குறிச்சி எம்பி ரூ.2.34 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கினார்

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில்  தந்தையை இழந்த மகள்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக கவுதமசிகாமணி எம்பி  உறுதியளித்தபடி கல்வி உதவி தொகை வழங்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் தந்தையை இழந்த மகள்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக கவுதமசிகாமணி எம்பி உறுதியளித்தபடி கல்வி உதவி தொகை வழங்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.
Updated on
1 min read

உளுந்தூர்பேட்டையில் நடை பெற்ற `உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில்' கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் கவுதமசிகாமணி உறுதியளித்தபடி ரூ.2,34,650-க்கான உதவித்தொகையை திமுக தலைவர் ஸ்டாலின் மூலம் நேற்று சென்னையில் வழங்கினார்.

கடந்த 12-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பேசிய பேபிரிஹானா என்பவரின் கணவர் ஆறுமுகம், தேசிய வாலிபால் பயிற்சியாளராக இருந்தார். எலவனாசூர்கோட்டை அரசு ஆண்கள் பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் ஆறுமுகம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனால் அவரது குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்தநிலையில் நிகழ்ச்சியில் பேசிய மனைவி பேபிரிஹானா திமுக தலைவர் ஸ்டாலினிடம், தனது வறுமை நிலையினை எடுத்துக் கூறி தனது மகள்களின் கல்விக்கு உதவுமாறு கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, பேபி ரிஹானாவின் இரு மகள்களின் கல்விச் செலவை ஏற்பதாக அங்கேயே கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் கவுத மசிகாமணி உறுதியளித்தார்.

அவர் உறுதியளித்தபடி, நேற்று பேபி ரிஹானா மற்றும் அவரது இரு மகள்களையும் சென்னை அண்ணா அறிவாலயம் வரவழைத்த கவுதம சிகாமணி, திமுக தலைவர் ஸ்டாலின் மூலம் இரு மகள்களுக்கான கல்வி உதவி தொகை ரூ.2,34,650-ஐ வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in