Published : 17 Feb 2021 03:13 AM
Last Updated : 17 Feb 2021 03:13 AM

ராகுல்காந்தி புதுச்சேரிக்கு வருவதற்குள் ஆட்சியை கலைத்துவிட வேண்டும் என திட்டமிட்டு செய்கின்றனர்: எதிர்க்கட்சியினர் மீது அமைச்சர் கந்தசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி மாவட்ட தொழில் மையம் சார்பில் ஆதிதிராவிடர் மக்களுக்கு நவீன தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் நிறைவு விழா நேற்று கிருமாம்பாக்கம் பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் விடுதியில் நடைபெற்றது.

இவ்விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:

ஒருவர் எம்எல்ஏவாக மக்களால்5 ஆண்டு காலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதன் பிறகு மக்களுக்கான நலத்திட்டங்களை செவ்வனே செய்து முன்னேற்றம் இருந்தால் அடுத்த 5 ஆண்டுகள் வாய்ப்பு அளிப்பார்கள். 5 ஆண்டுகள் முடியும் தருவாயில் 3 மாதங்களுக்கு முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்தால் அதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். பிரதமர் மோடி 5 ஆண்டு காலம் முடிவதற்குள் தொல்லை கொடுத்துக் கொண் டிருக்கிறார்.

ஆட்சி அமைத்த 6 மாதத்தி லேயே முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சியை மாற்ற பல்வேறு சதிகள் நடைபெற்றது. ஆனால் அதனை எல்லாம் சமாளித்து நான்கரை ஆண்டுகாலம் கொண்டு வந்துள்ளோம். அமைச்சரவையை கலைக்க முதல்வரிடம் கூறியுள் ளேன். அமைச்சரவையை கலைக் காமல் இருந்தால் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரையும் ராஜினாமா செய்ய பாஜக நிர்பந்திக்கும். ராகுல்காந்தி எதிர்காலத்தில் பிரதமராக வருவார். அவர் புதுச்சேரிக்கு வருவதற்குள் இந்த ஆட்சியை கலைத்துவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர். எதிர்க்கட்சியினர் ஏன் கலைக்க வேண்டும்? அதனை நாங்களே கலைத்து விடுகிறோம். இதனை மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

பட்டினி அதிகரிப்பு

ஜனநாயக நாட்டில் இந்த ஆட்சியை செயல்படுத்த முடிய வில்லை. துணைநிலை ஆளுநர் மாளிகையையொட்டி 500 மீட்டருக்கு மக்களால் சென்றுவர முடியவில்லை. 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு ராணுவத்தை வரவழைத்து ரூ.2 கோடி செலவிட்டுள்ளனர்.

இன்னும் 10 நாட்களில் மேலும் ரூ.1 கோடி செலவாகும். மக்களுக்கு எதையும் செய்ய விடாமல் மக்களின் வரிப்பணம் ஆண்டுக்கு ரூ.8 கோடியை ஆளுநர் செலவு செய்கிறார். ஒரு நபர் ரூ.8 கோடி செலவிடும் நிலையில், பல ஏழைகள் பட்டினியாகவும், இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமலும் இருந்து வருகின்றனர். அவர்க ளுக்கு திட்டங்களை செயல்படுத்த விடுவதில்லை.

ஆதிதிராவிடர் மாணவர்க ளுக்கு ஆரம்பம் முதல் ஆராய்ச்சி வரை இலவச கல்வியை கொண்டு வந்துள்ளோம். இதற்கு ஆண்டுக்கு ரூ.50 கோடியும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கொண்டு வர அரசாணை வெளி யிடப்பட உள்ளது.

அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடியும் என ரூ.250 கோடி ஆகிறது. நாங்களே ஆட்சியை கலைத்தாலும், அவர்கள் ஆட்சியை கலைத்தாலும் இந்த திட்டங்கள் நடைமுறைக்கு வரும் என்று அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x