

மதுரையில் இன்று மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் கருணாநிதி சிலை திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சி யில் பல ஆயிரம் பேர் பங் கேற்கின்றனர் என திமுக மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை புறநகர் மாவட்ட திமுக செயலாளர்கள் பி.மூர்த்தி (வடக்கு), எம்.மணிமாறன் (தெற்கு), மாநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கோ.தள பதி ஆகியோர் கூறியதாவது:
இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் மதுரை வரும் ஸ்டாலினுக்கு பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மாவட்டப் பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் உட்பட நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின் றனர். பிற்பகல் 3 மணிக்கு சிம்மக்கல்லில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலையை ஸ்டாலின் திறந்து வைத்துப் பேசுகிறார். இதற்காக 10 ஆயிரம் பேர் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகரிலுள்ள 4 தொகுதிகளிலிருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர். பின்னர் ஒத்தக்கடையில் நடக்கும் `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதில் மதுரை புறநகர் வடக்கு, தெற்கு மாவட்டங்களிலுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலி ருந்து தலா 10 ஆயிரம் பேர் வீதம் 60 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இதற்காக ஒத்தக்கடையில் உள்ள மைதானத்தில் அனைத்து வசதி களும் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அளிக்கும் புகார் மனுக் களைப் பெறுகிறார். விவசாயிகள், வணிகர்களைச் சந்தித்து உரை யாடுகிறார். இரவில் மதுரையில் தங்கும் ஸ்டாலின், நாளை தேனியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார் என்றனர்.