பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி உறுதி: மாநிலத் தலைவர் முருகன் பேச்சு

விருதுநகர் சூலக்கரைமேட்டில் நடைபெற்ற பூத் கமிட்டி மாநாட்டில் பேசுகிறார் தமிழக பாஜக தலைவர் முருகன்.
விருதுநகர் சூலக்கரைமேட்டில் நடைபெற்ற பூத் கமிட்டி மாநாட்டில் பேசுகிறார் தமிழக பாஜக தலைவர் முருகன்.
Updated on
1 min read

வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் பேசினார்.

விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக சார்பில் பூத் கமிட்டி மாநாடு விருதுநகர் அருகே உள்ள சூலக்கரைமேட்டில் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் முன் னிலை வகித்தார். முன்னதாக, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் வரவேற்றார்.

இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேசியதாவது:

மோடியின் வழிகாட்டுதல் தமிழகத்துக்கு வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயன் அடைந்தது தமிழகம்தான்.

ஏறக்குறைய 65 லட்சம் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 41 லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங் கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால கோரிக்கையான ஏழு பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித் தது காங்கிரஸ். அதற்கு துணை நின்றது திமுக. ஆனால் ஒரே நாளில் ஜல்லிக்கட்டு நடத்த அனு மதி பெற்றுத் தந்தது பாஜக. நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தல் தேச பக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையே நடைபெறும் தேர்தல். இதில் நாம் வெற்றிபெற்று, திமுகவை தோல்வி அடையச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலர் னிவாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, அரசு தொடர்புத் துறை மாநிலச் செயலாளர் சூரியநாராயணன் உட்பட பலர் வாழ்த்துரையாற்றினர்.

முன்னதாக மாநிலத் தலைவர் முருகனுக்கு  வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து பூரண கும்ப மரியாதை அளிக் கப்பட்டது.

நிர்வாகி பாண்டுரங்கன் நன்றி கூறினார். மாநாட்டில் பாஜக நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், தொண்டா்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in