

காளையார்கோவில் அருகே பாப்பான் கண்மாய் குளத்தில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.20 ஆயிரத்தை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக ஆட்சியில் தமிழகம் வெற்றி நடை போடாது என்று சீமான் சொல்லியுள்ளார். அவரைப் போன்றவர்கள் தமிழக அரசைக் குறை சொல்லி என்ன ஆகப் போகிறது?. குறை சொல்வதே எதிர்க்கட்சிகளின் வேலையாக உள்ளது.
தமிழகம் வெற்றி நடை போடுவதும், விவசாயிகளுக்கு அரசு வழங்கியுள்ள சலுகைகள் குறித்தும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். பயிர்க் கடன் தள்ளுபடி, பொங்கல் பரிசு ஆகியவற்றை அறிவித்ததால் அதிமுக வெற்றியை நோக்கிச் செல்கிறது. இதனால் எதிர்க்கட்சிகளுக்கு பொறாமை. பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றபோது இந்த ஆட்சி சில நாட்கள் கூட நீடிக்காது என நினைத்தனர். ஆனால், அதைமீறி வீறு கொண்டு செயல்படுகிறது என்றார்.