சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்: டிடிவி.தினகரன் நம்பிக்கை

சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்: டிடிவி.தினகரன் நம்பிக்கை
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சி அமைக்கும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

அமமுக மாநில பொருளாளர் ஆர்.மனோகரனின் தாய் ராஜலட்சுமி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்தநிலையில், திருச்சி திருவானைக்காவலில் உள்ள மனோகரனின் வீட்டுக்கு நேற்று சென்ற டிடிவி.தினகரன், ராஜலட்சுமியின் உருவப்படத் துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, செய்தியாளர் களிடம் அவர் கூறியது:

அதிமுகவை மீட்டெடுப்பதில் சசிகலா சட்டரீதியாக போராடி வெற்றி பெறுவார். சசிகலா வெளியே வந்த பிறகு எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர் வந்து சந்திப் பார்கள் என்று நான் ஒருபோதும் கூறவில்லை.

ஜெயலலிதாவின் மரணத் துக்குப் பிறகு கொடுக்கப்பட்ட ஆட்சியை ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருந்திருந்தால் பிப்.16-ம் தேதி மீண்டும் அவர் பரதனாயிருக்கலாம். ஆனால், ராவணனுடன் சென்று சேர்ந்து விட்டார்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 15 முதல் 17 சதவீதம் வாக்குகளைப் பெற்றோம். ஆண்டவர்கள், ஆண்டு கொண்டிருப்பவர்கள் குறித்து மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே, வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அமமுக நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.

கட்சியின் மாவட்டச் செயலா ளர்கள் ஜெ.சீனிவாசன், ஆர்.ராஜசேகரன், அமைப்புச் செயலா ளர் சாருபாலா தொண்டைமான் உட்பட பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in