

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில், அடகுகடை அதிபரை கட்டிப் போட்டு வாயில் துணியை வைத்து அடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் நேற்று கொள்ளை யடித்துச் சென்றனர். வாயில் துணி அடைத்ததால் ஏற்பட்ட மூச்சு திணறலில் அடகுகடை அதிபர் இறந்தார்.
காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் உள்ள ஆதிகாமாட்சி யம்மன் கோயில் பகுதியில் உள்ள ஜவஹர்லால் தெருவைச் சேர்ந்த மிட்டல் என்பவரின் மகன் கவுதம்ராஜ் (52). இவர், பூக்கடை சத்திரம் அருகே செங்கழு நீரோடை வீதியில் சொந்தமாக அடகு கடை நடத்தி வந்தார்.
வழக்கம்போல் நேற்று காலை அவர் கடையை திறந்து உள்ளே அமர்ந்திருந்தார். அப்போது, மர்மநபர்கள் சிலர் நகை அடகு வைப்பது போல் கடைக்கு வந்த தாக கூறப்படுகிறது. மேலும், மர்ம நபர்கள் நகை கடை உரிமையாளரின் முகத்தில் குளோரோபாம் மயக்க மருந்து தெளித்துள்ளனர். இதில் மயக்க மடைந்தவரை கயிற்றால் கட்டி போட்டுள்ளனர். மயமக்கம் தெளிந்து கூச்சலிடாமல் இருப்பதற் காக அவரது வாயில் துணியை வைத்து அடைத்ததாக கூறப் படுகிறது.
பின்னர், கடையிலிருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி னர். இந்நிலையில், உறவினர்கள் சிலர் கடையில் உள்ள தொலை பேசி மூலம் அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது, தொலை பேசி எடுக்கப்படாததால், சந்தேக மடைந்து கடைக்கு நேரில் வந்து பார்த்ததாக தெரிகிறது. அப்போது, அவர் மயக்கமடைந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரி வித்துவிட்டு அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரி வித்தனர்.
சிவகாஞ்சி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும், மாவட்ட எஸ்பி முத்தரசி நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து, போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: முகத் தில் குளோரோபாம் தெளித்தது மற்றும் வாயில் துணி அடைத்த தால், முச்சு திணறல் ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம். கொள்ளை போன நகைகளின் மதிப்பு தெரிய வில்லை. மதுரை சென்றுள்ள கவுதம்ராஜின் அண்ணன் திரும்பி வந்தால்தான் அவற்றின் மதிப்பு தெரியவரும். மேலும், கடையில் சிசிடிவி கேமரா இல்லாதாதல், கடைக்கு வந்த நபர்கள் யார் என் பது தெரியவில்லை. எனினும், வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறோம்.