

கனமழை காரணமாக சென்னை நகரத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாகி மக்கள் மெதுவே அதிலிருந்து மீண்டு வரும் நிலையில், சென்னை நகராட்சிதான் இத்தகைய நெருக்கடிக்குக் காரணம் என்பதில் சென்னை குடியிருப்புவாசிகள் ஒருமித்த குரல் எழுப்பியுள்ளனர்.
மழைநீர் வடிகால் அமைப்புகள் பெரிய அளவில் தேவைப்படுவதையும், மழைநீர் வடிகால்களில் அடைப்பை நீக்கும் பணியும் அலட்சியப்படுத்தப்பட்டதே வெள்ள நிலைமைகளுக்குக் காரணம் என்று அவர்கள் ஒருசேர கூறுகின்றனர்.
முகப்பேர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சூரியபிரகாசம் என்ற குடியிருப்பாளர், அம்பத்தூர் மண்டலத்தின் 92-வது வார்டின் கீழ் வரும் முகப்பேர் கிழக்கு பகுதி பெரும்பாலும் வெள்ளக்காடானதற்கு சரியான வடிகால் அமைப்புகள் இல்லாததே என்கிறார்.
“சென்னை நகராட்சி அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு கடந்த 10 நாட்களாக வருகை தரவில்லை. மழைநீரை வெளியேற்ற நாங்கள் எங்கள் பணத்திலிருந்து ரூ.30,000 செலவு செய்துள்ளோம். இதற்காக 3 மோட்டார்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. நேற்றுதான் வெள்ள நீரை அகற்றி முடித்தோம். மீண்டும் ஒரு மழை போதும் பழைய வெள்ள நிலைமைகளுக்குத் திரும்பி விடும். தற்போது சாக்கடை நீர் கலந்து விட்டதால் நீரின் நிறமே மாறிவிட்டது” என்றார் சூரிய பிரகாசம்.
முறையான மழைநீர் வடிகால் அமைப்புகள் இல்லாததால் இப்பகுதியில் மட்டும் சுமார் 144 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
“இப்பகுதியின் மற்ற இடங்களிலும் மழைநீர் வெள்ளத்தை வெளியேற்றும் சூழ்நிலைகளுக்குத் தள்ளப்பட்டோம். மாநகராட்சி அதிகாரிகள் இங்குள்ள பெரிய மருத்துவமனைக்கு வந்தனர், ஆனால் எங்களைப் பற்றி கவலைப்படவில்லை. டி.என்.எச்.பி. குடியிருப்பின் கீழ் தளத்தில் இருந்த 3 வீடுகளும் காலி செய்யப்பட்டன. மற்ற இடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டது. இப்போது பொதுச்சுகாதார நெருக்கடியை அதிகாரிகள் உடனடியாக களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் சூரிய பிரகாசம்.
அம்பத்தூர், வளரசவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோளிங்கநல்லூர், திருவொற்றியூர், மணலி, மாதவரம் உட்பட பல இடங்களில் முறையான வடிகால் அமைப்புகள் இல்லை என்பதே எதார்த்தம்.
சென்னையில் புதிதாகத் தோன்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைப்புகள் முறையாக இல்லை என்பதே இப்போது குற்றச்சாட்டாக உள்ளது.
மேலும், மழை நீர் இயற்கையாகச் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டு விட்டன. நாமாக உருவாக்கும் மழை நீர் வடிகால்களில் ஒரு குறிப்பிட்ட அளவே தீர்வு ஏற்படும். மழைவெள்ள நீர் தாமாகவே செல்லும் இயற்கை வழித்தடங்களில் அதிக கட்டிடங்களை அரசு அனுமதித்தது. எனவே நாமாக உருவாக்கும் மழைநீர் வடிகால் அமைப்புகள் ஒரு போதும் போதாது என்று முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி தேவசகாயம் சாடுகிறார்.
கழிவு நீர் வடிகாகல்களை தூறுவாரும் பணி ஆண்டு முழுதும் செய்யப்பட வேண்டும், ஆனால் அதற்கான எந்திரங்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்கிறார் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர்.