

சட்டப் பேரவை தேர்தலில் தமாகா தனித்து போட்டியிடாது என்றார் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உதகையில் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் ஜி.கே.வாசன் நேற்று சுற்றுப்பயணம் மேற் கொண்டார். குன்னூர், உதகையில் பொதுக்கூட்டத்தில் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மாணவர்கள், மகளிர் மற்றும் இளைஞர்கள் தமாகாவை நோக்கி அதிகம் வருகின்றனர். நேர்மையான நிர் வாகத்தை தமாகா தரும். தேர்தலில் தமாகா தனித்து போட்டியிடாது. இந்தியாவில் எந்தக் கட்சியும் தனித்து போட்டியிட்டதில்லை. வரும் சட் டப்பேரவைத் தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து, வெற்றி பெறுவோம். கூட்டணி பற்றிய அறிவிப்பு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித் துள்ளதால், அவற்றை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அரசியல் கட்சிகளில் கவர்ச் சிக்காக நடிகர்களை சேர்த்துக் கொள்ளும் நிலையில், தமாகா நடிகர்களை சேர்க்குமா என்ற கேள்விக்கு, ‘தமாகாவின் பலம், அதன் தலைவர்கள்தான்’ என்றார்.
மேட்டுப்பாளையத்தில்…
மேட்டுப்பாளையத்தில் பேசும் போது, ‘தமிழகத்தில் மது ஒழிப்பு பிரசார பாடகர் கோவன் கைது செய்யப்பட்டுள்ளது’ பற்றி அவரிடம் கேட்டபோது, ‘தமிழகத்தில் மது ஒழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை, அதே போல் கருத்து சுதந்திரமும் அவசியமே. ஆனால் அதற்காக வரம்பு மீறிய கருத்து சுதந்திரமும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார்.