

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக கல்விக் குழுமத்தின் தலைவரும், பெரம்பலூர் எம்.பி.யுமான பாரிவேந்தர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த பாக்கியராஜ் - செல்விதம்பதியின் மகளான சிறுமி நளினியின் அழுகையும், நிர்கதியாக நின்று கலங்கும் சூழ்நிலையும் நெஞ்சை நெகிழச் செய்கிறது.
சிறுமி நந்தினியின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். எனவே, பெற்றோரை இழந்து தவிக்கும் அவரது தற்போதைய பள்ளி வகுப்பு முதல், கல்லூரிப் படிப்பு வரை கல்விச் செலவு முழுவதையும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக கல்விக்குழுமம் ஏற்றுக்கொள்ளும். நந்தினியின் உறவினர்களிடம் இத்தகவலை தெரிவித்து, அவரது எதிர்காலம் குறித்த அச்ச உணர்வை நீக்கும் வகையில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.