

தங்கள் தொகுதிகளில் அரசு திட்டப் பணிகளை அதிமுக எம்எல்ஏ தொடங்கிவைக்கும் நிகழ்வுகள் தொடர்ந்தால் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என திமுக எம்எல்ஏக் கள் பி.மூர்த்தி, பா.சரவணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகனிடம் திமுக எம்எல்ஏக் கள் பி.மூர்த்தி, பா.சரவணன், மாவட்டச் செயலாளர் எம்.மணிமாறன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக பி.மூர்த்தி, பா.சரவணன் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவைச் சேர்ந்த நாங்கள் எம்எல்ஏக்களாக உள்ளோம். அதிமுகவைச் சேர்ந்த வி.வி.ராஜன் செல்லப்பா வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர், அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு திமுக எம்எல்ஏக்களின் தொகுதிகளில் அம்மா கிளி னிக் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பது, கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறார்.
முதல்வர், அமைச்சர்கள் வர இயலாத நிலையில், அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள்தான் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பது மரபு. ராஜன்செல்லப்பா அவரது தொகுதியை தவிர்த்து எங்கள் தொகுதிகளில் அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பது விதிமீறல். இது குறித்து அதிகாரிகளின் கவனத் துக்கு கொண்டு சென்ற போதும் நடவடிக்கை இல்லை. தற்போது மனு அளித்த போது, இனிமேல் இதுபோல் நடக்காது என ஆட்சியர் தெரிவித்தார். மீறி நடந்தால் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட் சியர் அலுவலகம் அருகே ஆர்ப் பாட்டம் நடத்துவோம் என்றனர்.
மாவட்ட ஊராட்சித் தலை வர் சூரியகலா, ஒன்றியப் பெருந்தலைவர்கள் வீரராகவன், மணிமேகலை உட்பட பலர் உட னிருந்தனர்.