

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் தேமுதிக சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ராமஜெயவேல் தலைமை வகித்தார். மாநில கலை இலக்கிய அணி அமைப்பாளர் விஜயகண்ணன் கலந்து கொண்டு பேசியது: ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அவரை வெற்றி பெறச் செய்வதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர் அறிவழகன், தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் அரியலூர் ஆனந்தன், ஜெயங்கொண்டம் ஜேக்கப் ஜெராமியஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.