கடனுக்காக அபகரித்து கொண்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி திருப்பத்தூரில் விவசாயி தீக்குளிக்க முயற்சி: காவல் துறையினர் விசாரணை

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி சிவக்குமார்.
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி சிவக்குமார்.
Updated on
1 min read

நிலத்தை மீட்டுத் தரக்கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றார். அவரை, காவல் துறை யினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், சார் ஆட்சியர் வந்தனா கர்க் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார்.

இதில், 169 பொது நல மனுக்களை பொதுமக்களிடம் இருந்து அரசு அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தீக்குளிக்க முயன்ற விவசாயி

திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை பாட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார் (44). இவர், மக்கள் குறைதீர்வுக்கூட்ட அரங்குக்கு நேற்று மனுவுடன் வந்தார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென தனது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சிவக்குமார் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். அவர் மீது தண்ணீரை ஊற்றி தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

சிவக்குமார், காவல் துறையின ரிடம் கூறும்போது, ‘‘பாட்டூர் கிராமத்தில் எனக்கு சொந்தமான 1 ஏக்கர் 60 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலையில், விவசாயத்துக்காக எனது நிலத்தின் பத்திரத்தை அடகு வைத்து வாணியம்பாடியைச் சேர்ந்த சூரியகலா என்பவரிடம் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.1.50 லட்சம் கடன் வாங்கினேன். இந்த தொகையை என்னால் திருப்பி செலுத்த முடியவில்லை.

இதனால், அந்த நிலத்தை அவர்களே அபகரித்துக் கொண்டனர்.எனவே, அபகரிக்கப்பட்ட விவசாய நிலத்தை மீட்டுத்தர வேண்டி தீக்குளிக்க முயன்றதாக" கூறினார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாட்டு கொட்டகையை அகற்றுக...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச்செயலாளர் சுந்தரேசன், ஒன்றியச் செயலாளர் ஆனந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அளித்த மனுவில், "திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை கிராமத்தில் ஊருக்கு பொதுவான இடத்தில் தனிநபர் ஒருவர் மாட்டு கொட்டகை அமைத்து தெருவையே ஆக்கிரமித்துள்ளார்.

இதனால், 5-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அந்த தெருவழியாக செல்ல முடியாமல் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வரு கின்றனர். இது தொடர்பாக காவல் மற்றும் வருவாய்த் துறையி னரிடம் முறையிட்டும் பலனில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி ஆக்கிரமிரப்பை அகற்ற வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in