Last Updated : 15 Feb, 2021 03:12 AM

 

Published : 15 Feb 2021 03:12 AM
Last Updated : 15 Feb 2021 03:12 AM

அதிமுக தொண்டர்கள் விருப்பத்தை அறியும் முயற்சியில் அமமுகவினர்

கரோனாவில் இருந்து மீண்ட சசிகலா, சென்னையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள போதிலும், தமிழக அரசியல் களத்தை உற்றுநோக்கி வருகிறார். மருத்துவர்கள் அறிவுரைப்படி 10 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு தனது ஆதரவாளர்களையும், அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்களையும் சந்தித்துப் பேசிவிட்டு, தீவிர அரசியலில் ஈடுபட அவர் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூருவில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து கடந்த மாதம் 27-ம் தேதி விடுதலையானார். கரோனாவுக்கு சிகிச்சை பெற்ற அவர் பெங்களூரு அருகே தனியார் சொகுசு விடுதியில் ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் சென்னைக்கு வந்தார்.

சசிகலாவின் வருகை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவரது வருகைக்கு முன்பும், வந்த பிறகும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. சசிகலாவின் வருகைஅதிமுகவில் மட்டுமல்லாமல் பிற கட்சியினர் மத்தியிலும் முக்கிய பேசுபொருளாக இருந்து வருகிறது.

இதனிடையே சசிகலா 10 நாட்கள்வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், தனது ஆதரவாளர்கள், கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் யாரையும் சந்திக்கவில்லை. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அவரைச் சந்திப்பதாகத் தெரிகிறது.

தனிமைப்படுத்திக் கொண்டாலும் ஊடகங்கள் மூலமாக தமிழக அரசியலை சசிகலா உற்றுநோக்கி வருகிறார். தனது சென்னை வருகைக்குப் பிறகு தமிழக அரசியல் நிலவரம் பற்றியும், குறிப்பாக தனக்கு ஆதரவாகப் பேசும் அரசியல் பிரபலங்கள் யார், தனக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர்கள் யார், பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களிடம் எத்தகைய மனப்பாங்கு நிலவுகிறது என்பதை தனக்கு நெருக்கமானவர்கள் மூலமாகவும் தெரிந்து கொள்கிறார்.

கடந்த 6 நாட்களாக ஓய்வில் இருக்கும் சசிகலா, மேலும் 4 நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு, அடுத்த வாரம் முதல் நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முதலில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர் அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்களை சந்திக்க உள்ளதாகத் தெரிகிறது. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்களில் அதிமுக - அமமுக இணைப்பை விரும்புபவர்கள் யார், அதனை விரும்பாதவர்கள் யார் என்று கண்டறியும் பணியை மறைமுகமாக மேற்கொள்ள அமமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அடிமட்ட தொண்டர்களின் விருப்பத்தை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு அதற்கேற்ப தீவிர அரசியல் ஈடுபட சசிகலா திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்களில் அதிமுக - அமமுக இணைப்பை விரும்புபவர்கள் யார், அதனை விரும்பாதவர்கள் யார் என்று கண்டறியும் பணியை மேற்கொள்ள அமமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x